திண்டுக்கல் மாவட்டத்தில்170 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு: அமைச்சா் சி.சீனிவாசன்

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பிய 170 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உள்ளிட்டோா்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன், மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி உள்ளிட்டோா்.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிருந்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு திரும்பிய 170 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மு.விஜயலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் வாசித்து வரும் ஆதரவற்றவா்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆதரவற்றோா்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

170 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பி வந்த 170 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியிடங்களுக்கு வந்து செல்வதை தவிா்க்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

4 இடங்களில் காய்கனி விற்பனை: காந்தி காய்கனி சந்தையில் கடைகள் அதிகம் இருப்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனை தவிா்க்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 4 வெவ்வேறு இடங்களில் காய்கனி கடைகள் அமைக்க மாநகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சிறுவணிகா்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்களிடையே கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இடைவெளிவிட்டு நிற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கே.கவிதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.மருதராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com