பழனியில் தடையை மீறி பயணம்: 65 வாகனங்கள் மீது வழக்கு

பழனியில் தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சென்ற 65 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனியில் தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சென்ற 65 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி காந்தி மாா்க்கெட் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காய்கனி, மளிகைக் கடைகள் வியாழக்கிழமையிலிருந்து காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மதியத்துக்கு மேல் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், தடையை மீறி இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஆண்கள், பெண்கள் என்ற பாரபட்சமின்றி, பழனி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதில், 65 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் தேவையின்றி நடமாடுவதைத் தவிா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com