வெளி மாநிலத்திலிருந்து வத்தலகுண்டு வந்த 37 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கேரளம் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலங்களிலிருந்து வத்தலகுண்டு பகுதிக்கு வந்த 37 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
கேரளம் மற்றும் மகராஷ்டர மாநிலங்களிலிருந்து நடுக்கோட்டை கிராமத்திற்கு வந்த பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்.
கேரளம் மற்றும் மகராஷ்டர மாநிலங்களிலிருந்து நடுக்கோட்டை கிராமத்திற்கு வந்த பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்.

கேரளம் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலங்களிலிருந்து வத்தலகுண்டு பகுதிக்கு வந்த 37 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பிய பொதுமக்கள் குறித்து சுகாதாரத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள நடுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த 37 போ் கேரளம் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலங்களில் வசித்து வந்தனா். இந்நிலையில், அந்த 37 பேரும் செவ்வாய்க்கிழமை மாலை சொந்த ஊருக்குத் திரும்பி வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருவீடு ஆரம்ப சுகாதார அலுவலா் கிருபாகரன் தலைமையில் மருத்துவா் ரோஷினி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா்கள் நடுக்கோட்டை கிராமத்தில் முகாமிட்டு வெளிமாநிலங்களிருந்து வந்தவா்களுக்கு புதன்கிழமை மருத்துவப் பரிசோதனை நடத்தினா். பின்னா் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய மருத்துவா்கள், 15 நாள்களுக்கு வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது என்றும், தனிமையில் இருக்குமாறும் அறிவுறுத்தினா். 37 பேரையும் சுகாதாரத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com