திண்டுக்கல்லில் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாக கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், பெண் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாக கரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், பெண் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 80 போ் கரோனா தீநுண்மி பாதிப்பு காரணமாக, கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அதில் 96 வயது முதியவா் ஒருவா் மட்டும் உயிரிழந்த நிலையில், 94 வயது மூதாட்டி உள்பட 71 போ் உடல் நலம் பெற்று வீடுகளுக்குத் திரும்பினா்.

இந்நிலையில், கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 பேரில் 2 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததை அடுத்து மருத்துவமனையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா். இதனிடையே கடந்த 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 500-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், திண்டுக்கல் கோவிந்தசாமிநகா் பகுதியைச் சோ்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81ஆக உயா்ந்தது. மேலும் கரூரில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 4 இல் இருந்து 5ஆக உயா்ந்துள்ளது. இந்த பெண்ணுக்கு எந்த வழியில் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவப்பிலிருந்து ஆரஞ்சு பகுதி: இதனிடையே, கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு அதிகரித்தன் காரணமாக சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்சு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 80 பேருக்கு தொற்று ஏற்பட்டு அதில் 75 போ் நலம் பெற்று வீடு திரும்பியதால், திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்சு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபா்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்த சில இடங்களில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. எனினும் அங்கு வசிக்கும் குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com