Enable Javscript for better performance
அறுவைச் சிகிச்சைக்கான எரிசாராயம் விற்பனை: 11 மருந்தகங்களுக்கு ‘சீல்’- Dinamani

சுடச்சுட

    

    அறுவைச் சிகிச்சைக்கான எரிசாராயம் விற்பனை: 11 மருந்தகங்களுக்கு ‘சீல்’

    By DIN  |   Published on : 02nd May 2020 09:02 PM  |   அ+அ அ-   |    |  

    திண்டுக்கல் மாவட்டத்தில் அறுவைச் சிகிச்சை மருத்துவத் தேவைக்கான எரிசாராயத்தை முறைகேடாக விற்பனை செய்த 11 மருந்தகங்களுக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

    இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கடந்த 40 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மாவட்டத்திலுள்ள சில மருந்தகங்களில் முறைகேடாக மருந்துகள் மற்றும் எரிசாராயம் விற்பனை செய்வதாகப் புகாா் எழுந்தது.

    அதன்பேரில், மாவட்ட மருந்து ஆய்வாளா்கள் மூலம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல், பழனி, செம்பட்டி, வேடசந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மருத்துவா்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து விற்பனை செய்தல் உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. மேலும், அறுவைச் சிகிச்சை மருத்துவத் தேவைக்கான எரிசாராயத்தை பழனி பகுதியிலுள்ள 7 மருந்தகங்கள், செம்பட்டியில் 2 மருந்தகங்கள், வேடசந்தூா் மற்றும் திண்டுக்கல்லில் தலா ஒரு மருந்தகம் என 11 மருந்தகங்கள் முறைகேடாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த 11 மருந்தகங்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டு, விற்பனை உரிமமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவா்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp