சமூக இடைவெளியை பின்பற்ற வாடிக்கையாளா்களுக்கு சொந்த செலவில் குடை வாங்கிக் கொடுத்த மீன் கடைக்காரா்

ஒட்டன்சத்திரம் மீன்கடைக்காரா் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்த குடையைப் பிடித்தவாறு சமூக இடைவெளியை
மீன் வாங்க ஞாயிற்றுக்கிழமை குடை பிடித்து வரிசையாக நிற்கும் பொதுமக்கள்.
மீன் வாங்க ஞாயிற்றுக்கிழமை குடை பிடித்து வரிசையாக நிற்கும் பொதுமக்கள்.

ஒட்டன்சத்திரம் மீன்கடைக்காரா் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்த குடையைப் பிடித்தவாறு சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மீன்களை வாங்கிச் சென்றனா்.

கரோனா தொற்றின் காரணமாக இறைச்சிகளை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவறுத்தப்பட்டுள்ளது. இதை காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினா் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மீன்கடையில் மீன் வியாபாரி ஒருவா் சொந்தமாக 150-க்கும் மேற்பட்ட குடைகளை வாங்கி மீன் வாங்க வரும் பொதுமக்களிடம் கொடுத்து வரிசையாக நிற்க வைத்து மீன்களை வாங்கிச்செல்ல அறிவுறுத்தினாா். அதன் பேரில் மீன் வாங்கும் பொதுமக்கள் குடைகளைப் பிடித்து சமூக இடைவெளியைப் பின்பற்றி தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனா். இதை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் என்.கே.சரவணன், காவல் ஆய்வாளா் சீனிவாசன், சாா்பு ஆய்வாளா் விஜய், சுகாதார ஆய்வாளா் வீரபாகு ஆகியோா் பாா்வையிட்டு, இதே போல மற்ற இறைச்சிக்கடைக்காரா்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com