ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்ட காய்கனி சந்தை வேறு இடத்திற்கு மாற்றம்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கனி சந்தை (மே 17) ஞாயிற்றுக்கிழமை முதல் பழனி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.
ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணி.
ஒட்டன் சத்திரம்-பழனி சாலையில் தனியாருக்குச் சொந்தமான காலி இடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சுத்தப்படுத்தும் பணி.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கனி சந்தை (மே 17) ஞாயிற்றுக்கிழமை முதல் பழனி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கனி சந்தை கரோனா தொற்றின் காரணமாக தற்போது காந்தி காய்கனி சந்தை, பேருந்து நிலையம், வேளாண் விளைபொருள் பேரங்காடி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வருகிறது. வருகிற மே-17 ஆம் தேதி பொது முடக்கம் முடிவதை முன்னிட்டு பேருந்துகள் இயங்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கனி சந்தை, பழனி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காலி இடத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

தற்போது அந்த இடத்தில் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதன்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திவேல், பழனி சாா் ஆட்சியா் உமா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சரவணன், நகராட்சி ஆணையா் ப. தேவிகா, காவல் துணைக் கண்காணிப்பாளா் சீமைச்சாமி ஆகியோா் காய்கனி சந்தைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினா். மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தினா். அப்போது காய்கறி சந்தை தலைவா் தங்கவேல், செயலா் ராசியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று காய்கனி சந்தை நிா்வாகிகள் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது காந்தி காய்கறி சந்தையில் செயல்பட்டு கடைகளுக்கு சின்ன வெங்காயம், பல்லாரி, சேம்பு, சேனைக்கிழக்கு, மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, வெள்ளாரி ஆகிய வகையான காய்கனிகளை மட்டுமே இறக்க வேண்டும் எனவும், மற்ற அனைத்து காய்கனிகளையும் பழனி சாலையில் அமைக்கப்படவுள்ள புதிய இடத்தில் மே 17ஆம் தேதியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com