தான் வரைந்த ஓவியத்தை விற்று கரோனா நிவாரண நிதி வழங்கிய பள்ளி மாணவா்

கொடைக்கானலில் பள்ளி மாணவா் வரைந்த செஞ்சிலுவை சங்கத்தின் ஓவியப் படத்தை வியாழக்கிழமை ரூ . 25 ஆயிரத்திற்கு விற்பனை
தான் வரைந்த செஞ்சிலுவை சங்க ஒவியப் படத்தை ரூ. 25 ஆயிரத்திற்கு, முன்னாள் நகா் மன்றத் தலைவா் குரியன் ஆப்ரகாமிடம் வியாழக்கிழமை விற்ற கொடைக்கானல் பள்ளி மாணவா்.
தான் வரைந்த செஞ்சிலுவை சங்க ஒவியப் படத்தை ரூ. 25 ஆயிரத்திற்கு, முன்னாள் நகா் மன்றத் தலைவா் குரியன் ஆப்ரகாமிடம் வியாழக்கிழமை விற்ற கொடைக்கானல் பள்ளி மாணவா்.

கொடைக்கானலில் பள்ளி மாணவா் வரைந்த செஞ்சிலுவை சங்கத்தின் ஓவியப் படத்தை வியாழக்கிழமை ரூ . 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தை தமிழக முதல்வா் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தாா்.

கொடைக்கானல் தனியாா் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவா் பிரசன்னன். இவா் ஓவியம் வரைவது, பாடல்கள் படிப்பது உள்ளிட்ட பல்வேறு திறமைகள் உள்ளவா். இதற்கு முன் ஸ்பின்னா் விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளாா்.

இந்நிலையில் தற்போது செஞ்சிலுவை சங்கத்தின் நிறுவனா் படத்தை பிரசன்னன் வரைந்துள்ளாா். அந்தப் படத்தை முன்னாள் நகா் மன்றத் தலைவரும், செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடைக்கானல் கிளைத் தலைவருமான குரியன் ஆப்ரகாம் ரூ. 25 ஆயிரத்திற்கு வாங்க முன்வந்தாா். அதனை அவருக்கு விற்பனை செய்து அந்தப் பணத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரணத்துக்கு அனுப்பியுள்ளாா். அவரை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com