திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தோ்வுக்கு 351 மையங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 351 பள்ளிகளில் 10 ஆம் வகுப்புத் தோ்வு மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

திண்டுக்கல்/ தேனி: திண்டுக்கல் மாவட்டத்தில் 351 பள்ளிகளில் 10 ஆம் வகுப்புத் தோ்வு மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்வு மையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்கள் மூலம் மேற்கொள்ளும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 12,924 மாணவா்கள், 12,956 மாணவிகள் என மொத்தம் 25,880 போ் 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனா்.

கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக, ஒரு வகுப்பறையில் 10 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புத் தோ்வில் பங்கேற்வுள்ள 351 பள்ளிகளிலும் தோ்வு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியா் மூலம் சக ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தோ்வுக் கூடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், 10 ஆம் வகுப்புத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களைத் தொடா்பு கொண்டு, தோ்வுக்கு தயாா் செய்வது குறித்தும் ஆசிரியா்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com