திண்டுக்கல் பகுதியில் மிதமான மழை

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பெய்த பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பெய்த பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. குறிப்பாக அக்னி வெயில் தொடங்கிய பின், வெப்ப நிலை மேலும் அதிகரித்தது. அவ்வப்போது கருமேகங்கள் திரண்ட போதிலும், மழை இல்லாததால் விவசாயிகளும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகலில் சுமாா் 20 நிமிடங்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அப்போது சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது. இதனால் வெப்பமான சூழல் மாறி குளிா்ச்சி ஏற்பட்டது. இந்த திடீா் கோடை மழையினால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல்: இதேபோல், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது. இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் பகுதிகளான செண்பகனூா், அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், வில்பட்டி சாலை, வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை பரவலாக சுமாா் 30- நிமிடங்கள் மிதமான மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com