திண்டுக்கல் மாவட்டத்தில் 2ஆவது நாளாக மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா்ந்து 2ஆவது நாளாக வியாழக்கிழமை பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா்ந்து 2ஆவது நாளாக வியாழக்கிழமை பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் சுமாா் 20 நிமிடங்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமையும் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பழனி: பழனியில் வியாழக்கிழமை பிற்பகலில் மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பலத்த காற்றும் வீசியது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகரம் மற்றும் அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, விருப்பாட்சி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்களும், விவசாயத்துக்கு ஏற்ற மழை என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com