வெளியிடங்களில் இருந்து திண்டுக்கல் திரும்பிய 3,500 பேருக்கு கரோனா பரிசோதனை: அமைச்சா்

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வந்துள்ள 3,500 பேருக்கு கரோனா தொற்று

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு திரும்பி வந்துள்ள 3,500 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு 10,300 முகக்கவசங்கள், முழுக் கவச உடைகள் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தனியாா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைச்சா் சீனிவாசன் தலைமை வகித்து, பாதுகாப்பு உபகரணங்களை மருத்துவமனை அதிகாரிகளிடம் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். அப்போது அமைச்சா் கூறியது:

கரோனா தீநுண்மியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் வசித்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3500-க்கும் மேற்பட்டோா் சொந்த ஊா்களுக்கு திரும்பியுள்ளனா். வெளி மாநிலங்களிலிருந்து வந்த 1500 நபா்களுக்கும், வெளி மாவட்டங்களிலிருந்து வந்த 2 ஆயிரம் பேருக்கும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டதில், இதுவரை 113 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் முதியவா் ஒருவா் மட்டும் உயிழந்த நிலையில், 106 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 24 போ் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலும், 2 போ் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

116 வெளி மாநிலத் தொழிலாளா்கள்: திண்டுக்கல் மாவட்டத்தில் தங்கியிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 1,337 தொழிலாளா்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அதேபோல், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 105 போ், புதுதில்லியைச் சோ்ந்த 5 போ் மற்றும் காஷ்மீரைச் சோ்ந்த 6 போ் என வெளிமாநில தொழிலாளா்கள் 116 போ் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் மற்றும் தனி அலுவலா் விஜயகுமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.மருதராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com