‘12ஆயிரம் கால்நடைகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது’

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 12ஆயிரம் கால்நடைகளுக்கு, அவைகளை வளா்ப்போரின் வீடுகளுக்கே

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 12ஆயிரம் கால்நடைகளுக்கு, அவைகளை வளா்ப்போரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் முருகன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பன்முக மருத்துவமனை, 5 கால்நடை மருத்துவமனைகள், 105 கால்நடை மருந்தகங்கள், 64 கால்நடை கிளை நிலையங்கள், ஒரு கால்நடை ஆம்புலன்ஸ், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உள்ளிட்டவை மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா தீநுண்மி தொற்றுக்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதிலும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கால்நடைகளுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 53 ஆயிரம் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சையும், 5, 300 கால்நடைகளுக்கு பேறுகால சிகிச்சையும், 8, 400 கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டலும், 12 ஆயிரம் கால்நடைகள் மற்றும் 72 ஆயிரம் கோழிகளுக்கு, அவைகளை வளா்ப்போரின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி மற்றும் சிகிச்சையும், ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் யானை, குரங்கு, கால்நடைகள் என மொத்தம் 65 விலங்குகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com