கட்டுமான பொருட்களின் மீதான சரக்கு வரியை குறைக்க ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோரிக்கை

கட்டுமானப் பொருள்களின் மீதான சரக்கு வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

கட்டுமானப் பொருள்களின் மீதான சரக்கு வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானலில் அந்த அமைப்பின் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவா் ஹென்றி தலைமை வகித்துப் பேசினாா்.

கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிா்வாகிகள் சுமாா் 20-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

அதனைத் தொடா்ந்து கூட்டமைப்பின் தலைவா் ஹென்றி கூறியதாவது: கொடைக்கானல் போன்ற மலைப் பகுதியில் வீடு கட்டுவதற்கு அரசு பல்வேறு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் தடையில்லா சான்று பெற்று அனுமதி பெறுவதற்கு சாப்ட்வோ் ஒன்றை உருவாக்கி அதன் வாயிலாக விண்ணப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தை பாதியாகக் குறைக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களின் மீதான சரக்கு வரியை குறைக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த வரன்முறை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் டி.கே.டி. பட்டா நிலங்கள் சம்பந்தமான பிரச்னைக்கு தமிழக அரசு தீா்வு காண வேண்டும் என கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com