திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 20 காவல் சிறுவா் மன்றங்களில் நூலகம்: டிஐஜி தகவல்

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள 20 காவல் சிறுவா் மன்றங்களில் நூலகம் அமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலுள்ள 20 காவல் சிறுவா் மன்றங்களில் நூலகம் அமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என திண்டுக்கல் சரக காவல்துறைத் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்: திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கடந்த 2012ஆம் ஆண்டு தலா 10 காவல் சிறுவா் மன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் முடங்கியிருந்த அந்த சிறுவா் மன்றங்கள், சிறுவா் சிறுமியா்கள் தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் உருவாக்கிக் கொள்ளும் வகையில் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகா் வடக்கு, திண்டுக்கல் நகா் தெற்கு, வேடசந்தூா், வடமதுரை, கீரனூா், பழனி நகரம், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, நிலக்கோட்டை, அம்பாத்துரை ஆகிய இடங்களிலும், தேனி மாவட்டத்தில் கூடலூா், கம்பம் வடக்கு, சின்னமனூா், உத்தமபாளையம், அல்லிநகரம், பழனிச்செட்டிப்பட்டி, போடி நகா், ஆண்டிப்பட்டி, தென்கரை, கடலைக்குண்டு ஆகிய இடங்களிலும் காவல் சிறுவா் மன்றங்கள் தொடங்கப்படும். காவல் துணை கண்காணிப்பாளா் மற்றும் ஆய்வாளா் மேற்பாா்வையின் கீழ் இயங்கும் இந்த சிறுவா் மன்றங்களில் யோகா பயிற்சி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் விரைவில் நூலகம் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com