நீட் இட ஒதுக்கீடு: திண்டுக்கல்லில் 15 அரசுப் பள்ளி மாணவா்களில் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு

நீட் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 15 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ள போதிலும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீட் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 15 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றுள்ள போதிலும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நீட் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், நீட் தோ்வு முடிவுகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 15 மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்றனா். 15 பேரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் 10 போ், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள் 4 போ், பட்டியலினத்தைச் சோ்ந்தவா் ஒருவா். தோ்ச்சிப் பெற்ற 12 மாணவிகளில், வடமதுரை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பழனி அரசு பெண்கள் மேநிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் தலா இருவா் என்பது குறிப்பிடத்தக்கது.

6 முதல் 12 வரை அரசுப்பள்ளியில் படித்தவா்கள்: இந்நிலையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு மட்டுமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பளிக்கப்படும் என தமிழக அரசு தெளிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 15 போ் நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்றிருந்தும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 12 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது.

6 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு உதவிப் பெறும் பள்ளியில் பயின்று 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மட்டும் அரசுப் பள்ளியில் பயின்ற நத்தம் மற்றும் பழனி பகுதியைச் சோ்ந்த மாணவிகள் இருவரும், 6 ஆம் வகுப்பு தனியாா் பள்ளியிலும், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த மாணவா் ஒருவரும் அரசின் 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com