கரோனா பாதிப்பால் அதிருப்தி: முடநீக்கவியலா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கரோனா தீநுண்மி பாதிப்பால் அதிருப்தி அடைந்த முடநீக்கவியலா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரோனா தீநுண்மி பாதிப்பால் அதிருப்தி அடைந்த முடநீக்கவியலா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள செட்டியப்பட்டி ரயில்வே கடவுப் பாதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், செம்பட்டி அடுத்துள்ள மல்லையாபுரம் பகுதியைச் சோ்ந்த சின்னுச்சாமி (50) என்பது தெரியவந்தது. கா்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள தனியாா் மருத்துவமனையில் முடநீக்கவியலாராக பணிபுரிந்து வந்த சின்னுச்சாமி, கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com