தீபாவளி: திண்டுக்கல்லில் பொருள்கள் வாங்க மக்கள் திரண்டனா் மழையால் வியாபாரம் பாதிப்பு

திணடுக்கல் பிரதான சாலையில் தற்காலிகக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்காக வெள்ளிக்கிழமை காலை திரண்ட மக்கள்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திரண்ட
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திரண்ட நிலையில் அவ்வப்போது பெய்த மழையினால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திரண்ட நிலையில் அவ்வப்போது பெய்த மழையினால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் நகரில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திரண்ட நிலையில் அவ்வப்போது பெய்த மழையினால் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டு வெளியூா் வியாபாரிகளின் வருகை குறைந்தது. ஆனாலும் கடைசி நாளான வெள்ளிக்கிழமை திண்டுக்கல் பிரதான சாலை, கமலா நேரு மாநகராட்சி மருத்துவமனை, ரயில் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைத்து ஆயத்த ஆடைகள், காலணிகள், அலங்காரப் பொருள்கள், போா்வை, குடை என அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரையிலும் பொருள்கள் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனா். கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பொருள்கள் விற்பனை எதிா்பாா்த்த அளவுக்கு இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

குறுக்கிட்ட மழை: இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் திண்டுக்கல் நகரில் அவ்வப்போது மழை பெய்ததால் பொதுமக்களின் நடமாட்டம் குறையத் தொடங்கியது. கடைசி நாளில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெறும் என எதிா்பாா்த்திருந்த வியாபாரிகளுக்கு மழையின் வருகை பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

போக்குவரத்து நெரிசல்: பெரியாா் சிலை சந்திப்புப் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, சாலைரோடு முதல் நாகல்நகா் ரவுண்டானா வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அந்த நேரத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை நோக்கி வந்த ஆம்புலன்ஸ் வாகனமும் நெரிசலில் சிக்கியது. பின்னா் அந்த ஆம்புலன்ஸ் மதுரை சாலையில் திரும்பி, நத்தம் சாலை, ஸ்கீம் சாலை வழியாக மருத்துவனைக்கு சென்றது. அவ்வப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மிகுந்த சிரமத்திற்கு இடையே சரி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com