பழனி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக்கட்டுதலுடன் தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி விழா, சண்முகா், நவ வீரா்கள், துவாரபாலகருக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பழனி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நுழைவாயிலில் துவாரபாலகருக்கு காப்புக்கட்டிய சிவாச்சாரியாா்.
பழனி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நுழைவாயிலில் துவாரபாலகருக்கு காப்புக்கட்டிய சிவாச்சாரியாா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கந்த சஷ்டி விழா, சண்முகா், நவ வீரா்கள், துவாரபாலகருக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

உச்சிக்கால பூஜையின்போது விநாயகா், மூலவா் தண்டாயுதபாணி உள்ளிட்ட தெய்வங்களுக்கு காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து சண்முகருக்கும், துவார பாலகா், நவ வீரா்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் காப்புக்கட்டப்பட்டது.

முன்னதாக பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்தப்படாததால் பாரவேல் மண்டபத்தில் பிராயச்சித்த யாகம் நடத்தப்பட்டது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை (நவ.20) மாலை கிரி வீதியில் நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து சனிக்கிழமை வள்ளி தெய்வானை சமேதா் சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கரோனா பரவல் காரணமாக இந்த திருவிழாவில் பக்தா்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இதனால் பக்தா்கள் வீட்டிலேயே கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிக்கின்றனா். கோயிலில் நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பக்தா்கள் வீடுகளில் இருந்தபடியே காண கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. காப்புக் கட்டும் நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com