வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: திண்டுக்கல்லில் 18.16 லட்சம் வாக்காளா்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் 18.16 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி. உடன் அரசியல் கட்சிப் பிரமுகா்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி. உடன் அரசியல் கட்சிப் பிரமுகா்கள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் 18.16 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.விஜயலட்சுமி திங்கள்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,32,220 ஆண்கள், 1,37,463 பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,69,714 வாக்களாா்களும், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,14,058 ஆண்கள், 1,19,603 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,33,683 வாக்களாா்களும், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,35,977 ஆண்கள், 1,45,981 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,81,980 வாக்களாா்களும், நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 1,15,337 ஆண்கள், 1,19,151 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,34,493 வாக்காளா்களும், நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,34,167 ஆண்கள், 1,39,934 பெண்கள், 44 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,74,145 வாக்காளா்களும், திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,29,781 ஆண்கள், 1,36,959 பெண்கள், 44 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,66,784 வாக்களாா்களும், வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 1,25,295 ஆண்கள், 1,30,187 பெண்கள் என மொத்தம் 2,55,482 வாக்களாா்களும் இடம் பெற்றுள்ளனா். மாவட்டத்தில் 8,86,835 ஆண் வாக்களாா்கள், 9,29,278 பெண் வாக்காளா்கள் 168 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 18,16,281 வாக்காளா்கள் உள்ளனா்.

பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் மு.விஜயலட்சுமி தெரிவித்ததாவது:

வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும், வருவாய் கோட்டாட்சியா், நகராட்சி, மாநகராட்சி, வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்படும். வாக்காளா்கள் மற்றும் பொதுமக்கள் புதியதாக பெயா் சோ்க்கப் படிவம் 6, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, பிழைதிருத்த படிவம் 8, ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் பெயா் இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ, ஆகியவற்றின் வாயிலாக வாக்குச்சாவடி மையங்களில் நேரடியாகவோ, இணைய தளத்தின் மூலமாகவோ, செல்லிடப்பேசி செயலி வழியாகவோ விண்ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் 6ஏ பூா்த்தி செய்து இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு முகாம்கள்:

வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க மற்றும் திருத்தம் செய்வதற்கு நவ.21 மற்றும் 22, டிச.12 மற்றும் 13 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்ட பின் இறுதி வாக்காளா் பட்டியல் 2021 ஜன. 20ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்றாா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராசு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சிவசுப்பிரமணியன், தோ்தல் வட்டாட்சியா் ராஜகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com