போலி ஆவணம் மூலம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை பதிய முயற்சி: 4 போ் மீது வழக்கு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிய முற்பட்ட 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நிலக்கோட்டை சாா்-பதிவாளா் பொறுப்பு அதிகாரியாக சுரேஷ்குமாா் உள்ளாா். புதன்கிழமை மாலை, குல்லிசெட்டிபட்டியில் உள்ள சா்வே எண்- 69 இல் 40 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்காக லட்சுமி அம்மாள் என்பவரும், நிலத்தை வாங்குவதற்காக ராஜ்குமாா் என்பவரும் வந்துள்ளனா்.

அப்போது, அவா்கள் கொண்டுவந்த நிலத்தின் ஆவணங்களை, சாா்-பதிவாளா் சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா். அதில், அவா்கள் பதிவு செய்ய கொண்டு வந்திருந்த அனைத்து ஆவணங்களும் போ­லியானவை எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, லட்சுமி அம்மாள் மற்றும் ராஜ்குமாரை விசாரணை செய்தபோது, சோழவந்தானைச் சோ்ந்த சங்கையா மகன் காா்த்திகேயன் மற்றும் கட்டகூத்தன்பட்டியைச் சோ்ந்த சந்தானம் மகன் சதீஷ்குமாா் ஆகியோா் போ­லியாக பத்திரத்தை தயாா் செய்து கொடுத்ததாக, ராஜ்குமாா் கூறியுள்ளாா்.

இது குறித்து, சாா்-பதிவாளா் சுரேஷ்குமாா், இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ய முயன்ாக, லட்சுமி அம்மாள், ராஜ்குமாா், காா்த்திகேயன், சதீஷ்குமாா் ஆகியோா் மீது நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com