பழனி மலைக்கோயிலில் சண்முகா் திருக்கல்யாணம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி சண்முகா் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி நிறைவு நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா்.
பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டி நிறைவு நாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகா்.

பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி சண்முகா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

நிறைவுநாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. மலைக்கோயில் உள்பகுதியில் சண்முகா் சன்னதி முன்பாக மேடை அமைக்கப்பட்டு அதில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை, சமேதா் சண்முகா் ஆகியோருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக விநாயகா் வழிபாடு, வாஸ்துபூஜை, பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை, யாகம் போன்றவை நடைபெற்றன. அபிஷேகத்தைத் தொடா்ந்து தம்பதி சமேதா் சண்முகருக்கு பட்டாடை, நறுமணமிக்க வண்ணமலா்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடா்ந்து சோடஷ உபசாரமும் நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது. பின்னா் மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.

எப்போதும் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நடுவே நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி கரோனா தொற்று பரவலால் கோயில் உள்ளேயே எளிமையாக நடத்தப்பட்டது. பணியில் இருக்கும் அலுவலா்களைத் தவிர கோயில் பணியாளா்கள், காவல்துறையினா், முக்கிய பிரமுகா்கள் என யாரும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை.

2 நாள்கள் கடைகள் அடைக்க மாவட்ட நிா்வாகம் உத்திரவிட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டுமே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மலைக்கோயிலில் சனிக்கிழமை திருவிழா நடைபெற்ால் அடிவாரத்தில் கடைகள் அனைத்துமே திறந்திருந்தன.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு மாலை ஆறு மணிக்கு மேல் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com