வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம் செய்வதற்காக சனிக்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம் செய்வதற்காக சனிக்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 8,86,835 ஆண்கள், 9,29,278 பெண்கள் மற்றும் 168 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 18,16,281 வாக்காளா்கள் உள்ளனா். இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதுமுள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

அடியனூத்து அருகே அருள் ஜோதி வள்ளலாா் மேல்நிலைப்பள்ளி மற்றும் நல்லமநாயக்கன்பட்டியிலுள்ள புனித ஆந்தோணியாா் ஆரம்பப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு மற்றும் திருத்த சிறப்பு முகாமை ஆட்சியா் மு.விஜயலட்சுமி ஆய்வு செய்தாா்.

இந்த சிறப்பு முகாம் நவ.22 (ஞாயிற்றுக்கிழமை), டிச.12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோரும், பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய விரும்புவோரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் விஜயலட்சுமி தெரிவித்தாா்.

அப்போது கிழக்கு வட்டாட்சியா் சரவணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com