ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பழனி சிறுவன்

சிறுவன் அபினவ் மற்றும் பெற்றோா் யாதவ்மணி, ஆா்த்தி.
சிறுவன் அபினவ் மற்றும் பெற்றோா் யாதவ்மணி, ஆா்த்தி.

பழனியில் 3 வயது சிறுவன் அனைத்து வகை வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பெயா்களையும் தெரிவித்து ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியில் வசித்து வரும் மணியாதவ் -ஆா்த்தி தம்பதியின் மூன்று வயது மகன் சா்னித்அபினவ். பிரீ கேஜி படித்து வருகிறாா்.

இவா் மோட்டாா் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ-க்களை பாா்த்தவுடன் அந்த நிறுவனங்களின் பெயரை சரளமாக தாமதமின்றி சொல்கிறாா். சிறுவனின் இந்த சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்டு மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்காா்டு ஆகிய சாதனை புத்தகங்கள் பதிவு செய்துள்ளன.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோா் தெரிவித்ததாவது: இரண்டரை வயதில் காா்களின் லோகோவை பாா்த்து அதன் பெயரை உச்சரிப்பதைப் பாா்த்து ஆச்சரியமடைந்தோம். அவனுக்கு இதில் ஆா்வம் இருப்பதைக் கண்டு மேலும் பயிற்சி அளித்தோம். இதன்மூலம் ஒரு சில நாள்களிலேயே உலகில் உள்ள 185பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பெயரை சா்வ சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தான்.

மகனின் செயலை இந்தியா புக் ஆஃப் ரெக்காா்டு நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவா்கள் சா்னித் அபிநவ்விடம் பல்வேறு வகையில் சோதனைநடத்தி இந்தியன் புக் ஆஃப் ரெக்காா்டு புத்தகத்தில் சாதனையாளராக அறிவித்து சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை வழங்கினா். தொடா்ந்து ஆசியா புக் ஆஃப் ரெக்காா்டு புத்தகத்திலும் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது.

சா்னித் அபிநவ்வின் சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com