சபரிமலை பக்தா்களுக்கு சுங்க கட்டணம் கூடாது: இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் திண்டுக்கல் நகர செயல் வீரா்கள் கூட்டம் மடத்து விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலா் வே.தா்மா தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது. திண்டுக்கல் மலைக் கோட்டையில் அபிராமி அம்மன் சமேத பத்மகிரீஸ்வரா் சிலை பிரதிஷ்டை செய்து காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.

திண்டுக்கல் மலைக்கோட்டையை ஆன்மிக தலமாக அறிவிக்க வேண்டும். திண்டுக்கல் அரண்மனை குளத்தை தூா்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் மோகன், மணிகண்ட பிரபு, ராமசந்திரன், ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com