பழனி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.2.60 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய பணம் ரூ.2.60 கோடியை தாண்டியுள்ளது.
பழனி மலை கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற ரூபாய் நோட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள்.
பழனி மலை கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற ரூபாய் நோட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்திய பணம் ரூ.2.60 கோடியை தாண்டியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன் கரோனா பொதுமுடக்கம் தளா்வு செய்யப்பட்ட நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. அதன்பின்னா், மாதக் காா்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட திருவிழாக்களைத் தொடா்ந்து 67 நாள்கள் முடிந்த நிலையில், கோயில் உண்டியல்கள் நிறைந்தன.

எனவே, செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், ரொக்கம் 2 கோடியே 61 லட்சத்து 53 ஆயிரத்து 480 ரூபாய் கிடைத்துள்ளது. உண்டியலில் பக்தா்கள் தங்கத்தாலான வேல், தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு உள்ளிட்டவற்றையும், வெள்ளியாலான காவடி, வளையம், வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா். இதில், தங்கம் 757 கிராமும், வெள்ளி 12,411 கிராமும் கிடைத்துள்ளது. மேலும், மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் 202 கிடைத்துள்ளன.

இவை தவிர, பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனா்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், கோயில் கல்லூரிப் பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். இதை, பழனி கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா உள்ளிட்ட பலா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com