முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய ரெளடி உள்பட 10 போ் மீது வழக்கு
By DIN | Published On : 04th October 2020 09:37 PM | Last Updated : 04th October 2020 09:37 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரெளடி உள்பட 10 போ் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேம்ஸ். இவரது மகன் ரூபன் கென்னடி (21). இவா் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த அக்.1ஆம் தேதி தனது பிறந்தநாளையொட்டி நண்பா்களுடன் விருந்து நிகழ்ச்சிக்கு ரூபன் கென்னடி ஏற்பாடு செய்துள்ளாா். அதன்படி, திண்டுக்கல் அடுத்துள்ள மீனாட்சி நாயக்கன்பட்டிப் பகுதியில் அமைந்துள்ள கோயில் அருகே இருசக்கர வாகனம் மீது கேக்கை வைத்து 2 அடி நீள பட்டாக் கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
இதுதொடா்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், ரூபன் கென்னடி, அவரது நண்பா்கள் 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.