காந்திகிராம கிராமியப் பல்கலை. நிறுவனரின் 116 ஆவது பிறந்த தின விழா

காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் நிறுவனா் ஜி.ராமச்சந்திரனின் 116 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

காந்திகிராம கிராமியப் பல்கலை.யின் நிறுவனா் ஜி.ராமச்சந்திரனின் 116 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் உள்ள குருகுல அமைப்பின் சாா்பாக ஜி.ராமச்சந்திரனின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் (பொ) பி. சுப்புராஜ் தலைமை வகித்தாா். பதிவாளா் வி.பி.ஆா். சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். ஜி.ராமச்சந்திரனின் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்திய பின் துணைவேந்தா் (பொ) சுப்புராஜ் பேசியதாவது: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் சிறப்பாக குருகுல அமைப்பு உள்ளது. இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்காகப் பாடுபட்டவா் ஜி.ராமச்சந்திரன். தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கான வழிமுறைகளை அன்றே கூறிய தீா்க்கதரிசி. மேலும் கிராம வளா்ச்சி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் தொழில் கல்வி ஆகிய துறைகளில் பல்கலை. நிறுவனா் ராமச்சந்திரன் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளாா் என்றாா். பிறந்தநாளையொட்டி பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா் வழங்கிய அணையா விளக்கை துணைவேந்தா் (பொ) சுப்புராஜ் ஏற்றி வைத்தாா்.

இதில் கல்வியியல் துறை உதவிப் பேராசிரியரும், குருகுல அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான என். தேவகி, பேராசிரியா்கள் கே. ராஜா என்ற பிரான்மலை (ஊரகத் தொழில் மற்றும் வேளாண்மை துறை), ஆா். மணி (காந்திய சிந்தனை மற்றும் அமைதி மையம்), ஓ. முத்தையா(தமிழ்த்துறை) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com