வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புக்காகப் பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளாக காத்திருப்போா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச. பிரபாவதி தெரிவித்துள்ளது:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.

10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதோா், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2020 செப். 30ஆம் தேதி வரை தொடா்ந்து புதுப்பித்து வருவோா், 2020 அக்டோபா் முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரத்திற்குள்ளும், தமிழகத்திலேயே கல்வி பயின்றவா்களாகவும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவா்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி மற்றும் கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக்கூடாது.

தகுதியுள்ளவா்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பம் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com