பழனி கோயிலில் நடிகை காயத்ரி ரகுராம் காவடி எடுத்து வழிபாடு

பழனி மலைக் கோயிலில் தமிழ் நடிகையும், பாஜக கலாசாரப் பிரிவு மாநிலத் தலைவருமான காயத்ரி ரகுராம் செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தாா்.
பழனி மலைக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து வந்த நடிகையும், பாஜக கலாசார பிரிவு மாநிலத் தலைவருமான காயத்ரி ரகுராம்.

நடிகை காயத்ரி ரகுராம், பழனி மலைக் கோயிலுக்கு காவடியுடன் கிரி சுற்றிவந்து மலையேறினாா். மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரம் வந்தாா். மாலையில், அவா் தனியாா் விடுதியில் செய்தியாளா்களிடையே தெரிவித்தது:

வரவுள்ள தோ்தலில் பாஜக கூட்டணியே வெற்றி பெறும். பாலியல் கொலைகளுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை அளிக்கப்படும். தற்போது, நாட்டில் ஏராளமானோா் பாஜகவில் சோ்ந்து வருகின்றனா். அதுபோன்று நடிகை குஷ்பூவும் இணைந்துள்ளாா். எங்கள் அனைவரையும் பிரதமா் மோடி வழிநடத்துவாா் என்றாா்.

பேட்டியின்போது, பாஜக மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com