ஊராட்சிச் செயலா் மீதான வன்கொடுமை வழக்கு: திரும்பப் பெற வலியுறுத்தி அக்.16 இல் போராட்டம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி அக். 16 ஆம் தேதி ஒருநாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட ஊராட்சி செயலா்கள் முடிவெடுத்துள்ளனா்.

கடலூா் மாவட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தெற்குதிட்டை ஊராட்சிச் செயலா் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தின் நிா்வாகக் குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜான் போஸ்கோ கூறியதாவது:

ஊராட்சிச் செயலா் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். அக்.16 ஆம் தேதி மாநிலம் முழுவதுமுள்ள 12,525 ஊராட்சிச் செயலா்களும் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்பாா்கள் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com