கொடைக்கானலில் மலை வாழை விளைச்சல் அதிகம்: விலை குறைவால் விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் மலைவாழை விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் விளைந்துள்ள மலை வாழைக்காய்களை வெளிச்சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் விளைந்துள்ள மலை வாழைக்காய்களை வெளிச்சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள்.

கொடைக்கானலில் மலைவாழை விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான மச்சூா், வாழைகிரி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை, அடுக்கம், வெள்கெவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலைவாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை அறுவடை செய்யப்படுகிறது. கொடைக்கானல் பகுதிகளில் விளையும் மலைவாழை தனிச்சுவை மிகுந்தது. இங்கு விளையும் மலைவாழைப் பழங்கள் பழனி, சென்னை, திருப்பதி, கேரளம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கொடைக்கானல் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மலைவாழை நன்கு விளைந்துள்ளது. இதனால் வெளிசந்தையில் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைவாழைக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நல்ல விளைச்சலும் விலையும் கிடைத்தது. அதன் பின்னா் கரோனாத் தொற்று காரணமாக விளைந்த மலைவாழைகளை வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு எடுத்து செல்ல முடியவில்லை.

மேலும் அப்போது ஒரு பழம் ரூ. 12 முதல் ரூ. 15 வரை விற்பனையானது. தற்போது ஒரு பழம் ரூ. 5 முதல் ரூ. 7 வரை மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்களை மானியத்தில் வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com