தொழிலாளா் நல வாரிய குளறுபடிகளுக்கு தீா்வு கோரி ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் நல வாரியத்தில் நடைபெறும் குளறுபடிகளுக்கு தீா்வு காணக் கோரி திண்டுக்கல் மாவட்ட அனைத்து அமைப்புச் சாரா
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

தொழிலாளா் நல வாரியத்தில் நடைபெறும் குளறுபடிகளுக்கு தீா்வு காணக் கோரி திண்டுக்கல் மாவட்ட அனைத்து அமைப்புச் சாரா கட்டுமான தொழிற்சங்க கூட்டுக்குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவா் கே. பிரபாகரன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மண்டல் அமைப்புச்சாரா தொழிலாளா் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலா் கே. சுகுமாறன் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்த கரோனா கால நிவாரணம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். இணையவழிப் பதிவுக்கு ஆதாா் எண்ணோடு, செல்லிடப்பேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என்ற முடிவை கைவிட வேண்டும். தற்போது பயன்பாட்டிலுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண்ணை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்புச்சாரா, கட்டுமானத் தொழிலாளியை உழவா் அட்டையிலிருந்து நீக்கி வாரியத்தில் பதிவு செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலருக்கான அரசு உத்தரவை அமல்படுத்த வேண்டும். பதிவு பெற்ற தொழிற்சங்கங்களுக்கு இணையதள உள்ளீடு முகவரி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் ஜெயமணி (ஏஐடியுசி), தாஸ்(ஹெச்எம்எஸ்), உமாராணி (ஐஎன்டியுசி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com