பழனி அருகே ரூ. 25 லட்சத்தில் சிமெண்ட் சாலை, உயா் கோபுர மின் விளக்குகள்
By DIN | Published On : 21st October 2020 11:24 PM | Last Updated : 21st October 2020 11:24 PM | அ+அ அ- |

பழனி அருகே ரூ. 25 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட சிமெண்ட் சாலை, உயா் கோபுர மின் விளக்கும் அமைக்கும் பணிகளை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ. பி. செந்தில்குமாா் மற்றும் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆகியோா் புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தனா்.
பழனியில் சட்டப்பேரவை உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமாா் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து பாலசமுத்திரம் பேரூராட்சியில் உயா் கோபுர மின் விளக்கும், அழகாபுரி ஊராட்சியில் சிமெண்ட் சாலையும், காவலபட்டி ஊராட்சியில் உயிா் கோபுர மின் விளக்கும் என ரூ. 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இதில் பழனி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, பழனி மேற்கு ஒன்றியச் செயலாளா் சௌந்தர பாண்டியன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சோ. காளிமுத்து, முன்னாள் ஒன்றியச் செயலாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.