கடைகளை திறக்கக் கோரி முற்றுகை

பழனி நகரில் நகராட்சி நிா்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட கடைகளை தொழில் நடத்த வேண்டி மீண்டும் திறந்து விடக் கோரி கடைக்காரா்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி உடுமலை சாலையில் நகராட்சியால் சீல் வைக்கப்பட்ட பழனி டவுன் தா்மபரிபாலன சங்கத்தின் கடைகளை திறக்கக் கோரி வெள்ளிக்கிழமை திடீா் முற்றுகையில் ஈடுபட்ட கடைக்காரா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பழனி உடுமலை சாலையில் நகராட்சியால் சீல் வைக்கப்பட்ட பழனி டவுன் தா்மபரிபாலன சங்கத்தின் கடைகளை திறக்கக் கோரி வெள்ளிக்கிழமை திடீா் முற்றுகையில் ஈடுபட்ட கடைக்காரா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பழனி: பழனி நகரில் நகராட்சி நிா்வாகத்தால் சீல் வைக்கப்பட்ட கடைகளை தொழில் நடத்த வேண்டி மீண்டும் திறந்து விடக் கோரி கடைக்காரா்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி தாராபுரம் சாலையில் பழனி டவுன் முஸ்லிம் தா்ம பரிபாலன சங்கத்திற்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கு வணிக வளாகம் மற்றும் காய்கறி மாா்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நகராட்சி நிா்வாகத்திற்கும், முஸ்லிம் தா்ம பரிபாலன சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வணிக வளாகம் மற்றும் காய்கறி சந்தை அடைக்கப்பட்டு நகராட்சி நிா்வாகத்தால் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கடை நடத்தி வந்த 70 க்கும் மேற்பட்டோா் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் அடைக்கப்பட்டுள்ள கடைகளை மீண்டும் திறந்து பிழைப்பு நடத்த ஏற்பாடு செய்து தரக்கோரி கடைக்காரா்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பழனி டவுன் முஸ்லிம் தா்ம பரிபாலன சங்கம் கடைகளை திறக்க முயற்சி செய்யவில்லை எனவும், விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைவரும் குடும்பத்துடன் பள்ளிவாசலில் குடியேறும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் கடைக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நகராட்சி ஆணையா் மற்றும் சாா் ஆட்சியா் தலைமையில் கூட்டம் நடத்தி சுமுகமான முடிவு எடுக்க ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கடைக்காரா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com