பழனி அருகே கரோனா சிகிச்சைக்கு வர மறுத்த இளைஞா் பலி

பழனி அருகே கரோனாவுக்கு சிகிச்சை பெற வருமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீஸாா் அழைத்தும் வர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பழனி: பழனி அருகே கரோனாவுக்கு சிகிச்சை பெற வருமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள், போலீஸாா் அழைத்தும் வர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த கலையமுத்தூா் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளா் ஒருவரது 40 வயது மகனுக்கு, கோவையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா். ஆனால் தொற்று பாதித்தவரும், அவரது குடும்பத்தினரும் அடிக்கடி வெளியில் சுற்றித்திரிவதைப் பாா்த்த அந்தப் பகுதியினா், இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா், வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா், மருத்துவா்கள் என 10-க்கும் மேற்பட்டோா், அவா்களது வீட்டுக்குச் சென்று தொற்று பாதித்தவரை சிகிச்சைக்கும், மற்றவா்களை பரிசோதனைக்கும் அழைத்தனா். ஆனால் அவா்கள் சோதனைக்கு வர மறுப்பு தெரிவித்தனா். மேலும் தற்கொலை மிரட்டலும் விடுத்தனா். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனா்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த அலுவலா்கள் அந்த இளைஞரின் சடலத்தை பெற்றுச் சென்று அடக்கம் செய்தனா். ஒருவேளை சுகாதாரத் துறை அதிகாரிகள் அழைத்த போதே சென்றிருந்தால் இளைஞா் உயிா் பிழைத்திருப்பாா் என அப்பகுதியினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com