ஏடிஎம்மில் தவறவிட்ட ரூ.20ஆயிரத்தை ஒப்படைத்த இளைஞருக்கு டிஐஜி பாராட்டு

திண்டுக்கல்லில் ஏடிஎம்மில் தவறவிடப்பட்ட ரூ.20 ஆயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு திண்டுக்கல் டிஐஜி பாராட்டு தெரிவித்தார்.
பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கக் காரணமாக இருந்த லக்கீஸ்வரனுக்கு பாராட்டு தெரிவித்த காவல்துறையினர்
பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கக் காரணமாக இருந்த லக்கீஸ்வரனுக்கு பாராட்டு தெரிவித்த காவல்துறையினர்

திண்டுக்கல்லில் ஏடிஎம்மில் தவறவிடப்பட்ட ரூ.20 ஆயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த இளைஞருக்கு திண்டுக்கல் டிஐஜி பாராட்டு தெரிவித்தார்.

திண்டுக்கல் நேருஜி நகர் பகுதியிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தில் அமல்சதீஸ் (22) என்பவர் பணம் எடுப்பதற்காக கடந்த திங்கள்கிழமை சென்றுள்ளார். ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்றபோது, பணம் வராததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் அதே  ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்ற சிறுமலை பழையூர் பகுதியைச் சேர்ந்த லக்கீஸ்வரன்(35) என்பவர், ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20ஆயிரம் இருப்பதை பார்த்துள்ளார்.

அந்தப் பணத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லக்கீஸ்வரன் உடனடியாக ஒப்படைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிசிடிவி கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்தபோது, ரூ.20ஆயிரத்தை விட்டுச் சென்றவர் அமல்சதீஸ்  என்பது தெரிய வந்தது. அதன்பேரில் அமல்சதீஸை அழைத்து, அந்த பணத்தை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ரூ.20ஆயிரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்து உரியவரிடம் வழங்குவதற்கு காரணமாக இருந்த லக்கீஸ்வரனுக்கு, திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா ஆகியோர்  புதன்கிழமை பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர்.

அமல்சதீஸ் என்பவரின் தந்தை பெஞ்சமின் ஆரோக்கியம் என்பவர், கடந்த 2002 ஆண் ஆண்டு நகை பறிப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதற்கு உறுதுணையாக இருந்து காவல்துறை இயக்குநரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.  அவர் செய்த உதவி, தற்போது அவரது மகன் அமல்சதீசுக்கு பலனைக் கொடுத்துள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com