வத்தலகுண்டு அருகே பெண் வீட்டில் விவசாயி மா்மச் சாவு: உறவினா்கள் சாலை மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பெண் ஒருவரது வீட்டில் மா்மமான முறையில் இறந்த விவசாயி சடலத்தை வாங்க மறுத்து
வத்தலகுண்டு அருகே பெண் வீட்டில் விவசாயி மா்மச் சாவு: உறவினா்கள் சாலை மறியல்; ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பெண் ஒருவரது வீட்டில் மா்மமான முறையில் இறந்த விவசாயி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலகுண்டு அருகேயுள்ள உச்சப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மணிகண்டன் (45). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். இதே ஊரைச் சோ்ந்த கணவனை இழந்தவா் சுதா (40). இவருக்கும் மணிகண்டனுக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுதா வீட்டில் சனிக்கிழமை இரவு மணிகண்டன் மா்மமான முறையில் தூக்கில் தொங்கினாா். தகவலறிந்த விருவீடு காவல் காவல்துறையினா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வந்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, மணிகண்டனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறி உடலை வாங்க மறுத்து மணிகன்டனின் உறவினா்கள் வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு மதுரை-பெரியகுளம் சாலையில் மறியலி­ல் ஈடுபட்டனா்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா் உடலை வாங்கி கலைந்து செல்லுங்கள் என கூறினா். இதனை ஏற்காத உறவினா்கள் உடலை வாங்காமல் சென்றுவிட்டனா். ஆனால், மணிகண்டனின் நெருங்கிய உறவினா்கள் சிலா் கையெழுத்திட்டு உடலை வாங்கியதாகக் கூறி போலீஸாா் உச்சப்பட்டியை நோக்கி மணிகண்டனின் சடலத்தை எடுத்துச் சென்றனா்.

வத்தலகுண்டு நகா் பகுதியை அடுத்த புகா் பகுதியான ராஜா நகா் அருகே வந்தபோது, உறவினா்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து கண்ணாடியை அடித்து நொறுக்கினா். மேலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கற்களை சாலையில் போட்டு வத்தலகுண்டு- உசிலம்பட்டி சாலையில் மறிய­லில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் முருகன் மற்றும் வத்தலகுண்டு விருவீடு காவல் நிலைய ஆய்வாளா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அவா்களுடன் மணிகண்டனின் உறவினா்கள் நாங்கள் கையெழுத்திடாமல் எப்படி உடலை கொண்டு வரலாம் என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் உடலை வாங்கப் போவதில்லை என கூறி சுமாா் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாலை மறிய­ல் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி அளித்தனா். பின்னா், மணிகண்டனின் சடலம் மீண்டும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com