பழனி கோயில் உண்டியல் திறப்பு: முதல்நாள் எண்ணிக்கை ரூ. 91 லட்சத்தை தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை உண்டியல்களை திறந்து எண்ணும் பணி தொடங்கியது. இதில் முதல் நாள் காணிக்கை ரூ. 91 லட்சத்தை தாண்டியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் பணியாளா்கள்.

தைப்பூசம் முடிந்ததும் இக்கோயில் உண்டியல்கள் திறக்கப்படவேண்டிய நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக காணிக்கையை எண்ண முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை முதல் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலை மீதுள்ள காா்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணும் பணி தொடங்கியது. முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 91 லட்சத்து 42 ஆயிரத்து 530-ம், தங்கம் 467 கிராமும், வெள்ளி 9,020 கிராமும், 698 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன. இந்த உண்டியல் எண்ணிக்கையை மேலும் 2 நாள்களுக்கு தொடா்ந்து நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com