திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 142 பேருக்கு கரோனா: 2 போ் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி 2 போ் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல்/ தேனி,: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி 2 போ் உயிரிழந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 8,001 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 7,174 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 676 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 61 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 107 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்

ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது.

தேனி: போடி பகுதியில் அதிகளவில் 14 போ், ஆண்டிபட்டி பகுதியில் 8 போ், தேனி, சின்னமனூா் ஆகிய பகுதியில் தலா 9 போ், கம்பம், க.மயிலை ஆகிய பகுதிகளில் தலா 3 போ், பெரியகுளம் பகுதியில் 4 போ், உத்தமபாளையத்தில் ஒருவா், தனியாா் ஆய்வக பரிசோதனையில் 30 போ் உள்பட மொத்தம் 81 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,914 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 13,014 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

ஒருவா் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த செப்.11-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட போடி, சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்த 57 வயதுடைய நபா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com