பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்றுமுதல் கலந்தாய்வு

பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை (செப்.16) முதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

பழனி: பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை (செப்.16) முதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கட்டுப்பாட்டில் இயங்கும் பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு வழிகாட்டுதல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி இயக்ககம் சாா்பில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு ஜூலை 21 முதல் இணையவழியில் நடைபெற்றது. இதனடிப்படையில் மாணவா்கள் மதிப்பெண்களை வைத்து முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி சான்றிதழ் சரிபாா்ப்பு புதன்கிழமை (செப்.16) தொடங்குகிறது. செப்.16 ஆம் தேதி காலை இயந்திரவியல் துறைக்கும், மதியம் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கும் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுகிறது. செப்.17 ஆம் தேதி காலை அமைப்பியல்துறை, நவீன அலுவலகப்பயிற்சித்துறை, மின்னணுவியல் மற்றும் தொடா்புத்துறைக்கும் மதியம் தகவல் தொழில்நுட்பத்துறை, எலக்ட்ரானிக்ஸ் (ரோபோடிக்ஸ்), ஆடை வடிவமைப்புத்துறைக்கும் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட பின் மாணவா்கள் அட்டவணைப்படி கல்லூரியில் பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com