கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகம்; விலை குறைவு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளபோதும் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கொடைக்கானல் வசந்த நகா்ப் பகுதியில் விளைந்த உருளைக்கிழங்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
கொடைக்கானல் வசந்த நகா்ப் பகுதியில் விளைந்த உருளைக்கிழங்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளபோதும் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கொடைக்கானலில் வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, அ ட்டுவம்பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம், கோம்பை, சகாயபுரம், மன்னவனூா், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் உருளை சாகுபடி செய்திருந்தனா். இப் பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்கானது மதுரை, திருச்சி, தேனி போன்ற வெளி மாவட்ட சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு நன்கு விளைந்துள்ளது. ஆனால் விலை சற்று குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். செண்பகனூா், பிரகாசபுரம், அட்டக்கடி, வாழை காட்டு ஓடை, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கை எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: 50 கிலோ சிப்பம் கொண்ட விதை உருளைக்கிழங்கு ரூ. 2 ஆயிரத்துக்கு வாங்கி நடவு செய்யப்பட்டது. உரமிடுதல், மருந்து தெளித்தல், மண் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பராமரிப்பு வேலைகள் செய்து பயிரைக் காப்பாற்றி வந்தோம். மழைக் காலங்களில் அதிக அளவு பூச்சி தாக்காமல் இருக்க மருந்து தெளிக்கப்பட்டது. இதனால் 120-நாள்களுக்குப் பிறகு தற்போது உருளைக்கிழங்கு நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. ஆனால் சந்தையில் 45 கிலோ உருளைக் கிழங்கு சிப்பம் தற்போது ரூ. 1500 முதல் 1700 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சற்று பாதிப்பு ஏற்படுகிறது. தோட்டக்கலைத் துறையினா் கொடைக்கானல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை நேரடியாக பாா்வையிட்டு விவசாயிகளின் குறைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com