வட்டாட்சியா் அலுவலகங்களில் செப்.21 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சிறப்பு அதிகாரிகள் நியமனம்

கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் செப்.21 முதல் தற்காலிகமாக மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் தொடரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் செப்.21 முதல் தற்காலிகமாக மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் கூட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொது மக்கள் நலன் கருதி, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலேயே செப். 21ஆம் தேதி முதல் குறைதீா் கூட்டங்கள் தற்காலிகமாக நடைபெறும். முகாமில் பங்கேற்க வருவோா், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோா், கா்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது. அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாக, அவரது ரத்த சம்பந்த உறவினா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மனு அளிக்கலாம்.

கூட்டம் நடைபெறும் இடத்தில் 45 நிமிடங்களுக்கு ஒரு முறை தூய்மைப் பணி நடைபெறுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதிக அளவு கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும். நுழைவு வாயில் பகுதியில் அலுவலா்கள் மற்றும் மனுதாரா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும். மனுதாரா்கள் உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கும் தனித் தனி வழி அமைக்க வேண்டும்.

வட்ட வாரியாக மனுக்கள் பெறும் அதிகாரிகள் விவரம்: திண்டுக்கல் மேற்கு -து.ஆயுசி சிங் (உதவி ஆட்சியா் (பயிற்சி), திண்டுக்கல் கிழக்கு - இந்திரவள்ளி (மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்), ஆத்தூா் - ச.சிவக்குமாா் (தனித்துணை ஆட்சியா்) , நத்தம் - கே.உஷா (திண்டுக்கல் கோட்டாட்சியா்), நிலக்கோட்டை - ராஜராஜன் ( மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு), பழனி- அ.அசோகன் (பழனி கோட்டாட்சியா்), ஒட்டன்சத்திரம் - க.செல்வராஜ் (திண்டுக்கல் உதவி ஆணையா் (கலால்), வேடசந்தூா் - இரா.கோவிந்தராசு (மாவட்ட வருவாய் அலுவலா்), குஜிலியம்பாறை -சு.சு.விஸ்வநாதன்(திண்டுக்கல் துணை ஆட்சியா் (பயிற்சி), கொடைக்கானல் - எம்.சிவகுரு பிரபாகரன் ( கொடைக்கானல் சாா்- ஆட்சியா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com