கொடைக்கானலில் சாலைகளில் தேங்கிய மழைநீர்  

கொடைக்கானலில் பெய்த மழையால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கியுள்ளது.
கொடைக்கானலில் சாலைகளில் தேங்கிய மழைநீர்.
கொடைக்கானலில் சாலைகளில் தேங்கிய மழைநீர்.

கொடைக்கானலில் பெய்த மழையால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கியுள்ளது. 

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் பகுதிகளான லாஸ்காட் சாலை, சீனிவாசபுரம், இருதயபுரம், கொய்யாபாறை, அட்டக்கடி, தைக்கால், டிப்போ சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைத் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலைகளில் குளம் போன்று தேங்கியிருக்கிறது. 

இதனால் அப்பகுதிகளில் வாகனங்கள் செல்லும் போது தேங்கி கிடக்கிற தண்ணீரால் நடந்து செல்லும் பாதசாரிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இதனையடுத்து சீனிவாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி செல்லும் பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கழிவு நீரும் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக் கேடு நிலவி வருவதோடு கொசு, போன்ற பூச்சிகள் உற்பத்தியாகிறது. 

இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்பகுதியிலுள் அடைபட்டிருக்கும் வாய்க்காலை சரி செய்து மழைத் தண்ணீர் செல்வதற்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், இருதயபுரம், அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் வாய்க்கால்கள் அமைத்து சாலைகளில் கழிவு நீரும், மழைத் தண்ணீரும் தேங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com