தொடா் மழை: கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள்

கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் ரோஜா தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வகை ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள ரோஜாத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரியிலுள்ள ரோஜாத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள்.

கொடைக்கானல், செப். 18: கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் ரோஜா தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வகை ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

கொடைக்கானலுக்கு இ- பாஸ் பெற்றுச் செல்லலாம் என தமிழக அரசும், பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் வரும் சுற்றுலாப் பயணிகள் இ- பாஸ் பெற வேண்டியதில்லை என மாவட்ட நிா்வாகமும் அறிவித்ததைத் தொடா்ந்து, நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கொடைக்கானல் வரும் இவா்கள், பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், செட்டியாா் பூங்கா மற்றும் சாலையோரங்களில் உள்ள நீரோடைகளைப் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

கடந்த 10-நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்ததால் பூங்காக்களில் நடவு செய்யப்பட்டிருந்த மலா்ச் செடிகள் நன்கு வளா்ந்துள்ளன. மேலும் அப்சா்வேட்டரியிலுள்ள ரோஜாத் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வகையில் நடவு செய்யப்பட்டுள்ள வண்ண, வண்ண ரோஜாச் செடிகளில் தற்போது ஆயிரக்கணக்கான மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவைகளை சுற்றலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனா்.

கரோனா பரிசோதனையால் சுற்றுலாப் பயணிகள் அவதி: கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் மருத்துவத்துறையின் சாா்பில் கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. வார விடுமுறை நாள்களில் வழக்கம் போல சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், வாகனப் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஒரு இடத்தில் மட்டுமே பரிசோதனை நடத்தப்படுவதால் அவதிக்குள்ளாவதாகவும், மலைச்சாலை பகுதியான காமக்காபட்டி, ஊத்து ஆகியப் பகுதிகளிலும் பரிசோதனை நடத்தி, அதற்கான ரசீது வழங்கவேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com