கோணலாறு செல்ல கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தல்

கொடைக்கானல் அருகே கோணலாறு பகுதிக்கு செல்வதற்கு வனத்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென கிராம மக்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சார் ஆட்சியரிடம் மனுஅளித்த கிராம மக்கள்.
சார் ஆட்சியரிடம் மனுஅளித்த கிராம மக்கள்.

கொடைக்கானல் அருகே கோணலாறு பகுதிக்குச் செல்வதற்கு வனத்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென கிராம மக்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி வனப் பகுதியில் உள்ள பழமையான கோணலாறு அணை சேதமடைந்திருந்தது. இவற்றை கடந்த 1999-ம் ஆண்டு நிதி ஒதுக்கி பொதுப்பணித்துறையின் சார்பில் அணையை சரி செய்து கொடுத்தனர். இங்கிருந்து தான் கவுஞ்சி கிராம மக்களுக்கு குடி தண்ணீராக பயறனடைந்து வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கும் கிராம மக்கள் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அணைபழுதடைந்து தண்ணீர் வீணாகச் செல்வதால் மக்களுக்கு சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை, அப் பகுதியிலுள்ள கோயிலுக்கும் செல்வதற்கு வனத்துறையினர் கட்டுப்பாடு வித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சேதமடைந்த அணையை சரிசெய்து கொடுப்பதற்கு மனு கொடுப்பதற்காக கொடைக்கானலிலுள்ள பொதுப் பணித்துறை நீர்வள ஆதார மைய அலுவலகத்திற்கு பலமுறை கிராம மக்கள் வந்துள்ளனர்.

ஆனால் அந்த அலுவலகம் பூட்டியே இருந்து வருகிறது. எனவே கோணலாறு அணையில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்வதற்கும் கொடைக்கானலிலுள்ள சார் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இது குறித்து பாரதீய கிசான் சங்கம் மற்றும் கிராம மக்கள் கூறியதாவது, கவுஞ்சி பகுதியிலுள்ள கோணலாறு அணையில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்து கொடுக்க வேண்டும். 

அப் பகுதியிலுள்ள கோயிலுக்கு செல்வதற்கு விதிக்கப்படும் தடைகளை வனத்துறையினர் அகற்ற வேண்டும். இல்லையெனில் கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com