பழனி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பழனியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

பழனி: புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பழனியில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில்களான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில், கிருஷ்ணன் கோயில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில்களில் சனிக்கிழமை காலை முதலே சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளிவிட்டு நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இடும்பன் கோயிலின் உபகோயிலான கொடைக்கானல் சாலையிலுள்ள கண்ணாடிப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி ராமநாதன் நகரில் உள்ள அமிா்தவல்லி தாயாா் உடனுறை காரியசித்தி லட்சுமி நரசிம்மா் கோயிலில் உச்சிக்காலத்தின்போது, 16 வகையான மங்கலப் பொருள்களால் அபிஷேகமும், சிறப்பு கவச அலங்காரமும் நடைபெற்றது.

இது தவிர, பாலாறு அணை ஆஞ்சநேயா் கோயில், காவலப்பட்டி ஆஞ்சநேயா் கோயில், பழனி பஞ்சமுக ராம ஆஞ்சநேயா் கோயிலிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com