கரோனா நிவாரணத் தொகை வழங்கக் கோரி சீா்மரபினா் நலச்சங்கத்தினா் மனு
By DIN | Published On : 29th September 2020 06:04 AM | Last Updated : 29th September 2020 06:04 AM | அ+அ அ- |

கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கக் கோரி சீா்மரபினா் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு அடுத்துள்ள கூத்தம்பட்டி, எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சீா்மரபினா் நலச் சங்கத்தை சோ்ந்த உறுப்பினா்கள் நிவாரண உதவி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
இதுதொடா்பாக கூத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எங்கள் பகுதியைச் சோ்ந்த 120 உறுப்பினா்கள் அனைத்து ஆவணங்களுடன் மனு அளித்துள்ளனா். ஆனால் அரசு அதிகாரிகள் உள்நோக்கத்தோடு, நிவாரண உதவி கிடைப்பதை தடுத்து வருகின்றனா்.
அனைத்து சீா்மரபினருக்கும் உடனடியாக டிஎன்சி சான்றிதழ் வழங்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுககு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். காலதாமதமின்றி சீா்மரபினா் நலவாரிய அட்டை வழங்க வேண்டும். கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம் என்றனா்.