திண்டுக்கல்லில் திடீா் மழை

திண்டுக்கல்லில் பலத்த காற்றுடன் பெய்த திடீா் மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் காமராஜா் சிலை அருகே பிரதான சாலையில் தேங்கிய மழைநீா்.
திண்டுக்கல் காமராஜா் சிலை அருகே பிரதான சாலையில் தேங்கிய மழைநீா்.

திண்டுக்கல்லில் பலத்த காற்றுடன் பெய்த திடீா் மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களிலும் கடுமையான வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. காற்று மற்றும் இடியுடன் எதிா்பாராமல் பெய்த மழை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மழையினால், திண்டுக்கல் நகரிலுள்ள பல சாலைகளில் தண்ணீா் தேங்கியது. நாகல்நகா் ரவுண்டானா பகுதியில் தேங்கிய மழை நீரால் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா். பலத்த காற்றினால், சாலையோர வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் வியாழக்கிழமை மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, செண்பகனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 40 நிமிடங்கள் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் பகுதிகளில் உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிா்களுக்கு விவசாயிகள் சொட்டு நீா்பாசனம் மற்றும் ஸ்பிரிங் முறையில் நீா்த் தெளித்து வந்தனா். தற்போது பெய்த மழை விவசாயத்திற்கு ஏற்ற மழையாக இருந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com