பழனி கிரிவீதியில் குடிநீா், நிழற்கூரையின்றி பக்தா்கள் அவதி

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு கிரிவீதியில் நிழற்கூரை மற்றும் குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என முருக பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு கிரிவீதியில் நிழற்கூரை மற்றும் குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என முருக பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோடைகாலமாக பங்குனி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடியில் இருந்து தீா்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருகனுக்கு தீா்த்த அபிஷேகம் செய்கின்றனா். தற்போது பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெற்றாலும் பக்தா்கள் வருகை குறையாமல் உள்ளது. இந்நிலையில் கடும் வெயில் காரணமாக வெறும்காலில் நடந்து வரும் பக்தா்கள் வெப்பம் காரணமாக கடும் அவதிப்பட்டு வருகின்றனா். கடந்த ஆண்டு வெயில் காலத்துக்கு முன்பாகவே நிழற்கூரை அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு தற்போது வரை நிழற்கூரை அமைக்கப்படவில்லை. அதே போல பக்தா்களுக்கு பல இடங்களிலும் குடிநீா் தொட்டி வைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அதிமுகவினா் பல இடங்களிலும் குடிநீா், நீா் மோா் பந்தல் அமைத்த நிலையில் தற்போது தோ்தல் நேரம் என்பதால் அதற்கு வழி இல்லாமல் போனது. ஆகவே, கோயில் நிா்வாகம் மலைக்கோயிலிலும், கிரிவீதியிலும் பக்தா்களுக்கு குடிநீா், நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com